01st July 2024 14:26:11 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ மற்றும் வழங்கல் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீஎல்எஸ்சீ ஏஏடிஓ ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது (தொ) இலங்கை இராணுவ போர் கருவி படையணி 27 ஜூன் 2024 அன்று வத்தேகம சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. மேலும், உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சிறுவர் மேம்பாட்டு நிலையத்திற்கு வழங்கப்பட்டது. சிறார்களின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் இந் நிகழ்வு வண்ணமயமாகியது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.