01st July 2024 14:26:32 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) நில்மினி பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 ஜூன் 2024 அன்று பொசன் பண்டிகையைக் முன்னிட்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியும் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் பீஎசீ பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.