28th June 2024 18:40:28 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்களின் முயற்சியில் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 28 கர்ப்பிணித் துணைவியர்களுக்கு 17 ஜூன் 2024 அன்று அடிப்படை மகப்பேற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். மேலும், இந் நிகழ்வின் போது, சிவில் ஊழியர் ஒருவருக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கான நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.