28th June 2024 15:13:34 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 27 ஜூன் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவினரின் அழைப்பை ஏற்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி திட்டத்தின் போது இராணுவ நலன்புரி நிதியத்தின் ஊடாக இராணுவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மொத்தம் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான 143 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. புலமைபரிசில் பெற்றவர்களில், , தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய 28 சிறார்களுக்கு இலங்கை வங்கி, லேக் ஹவுஸ் கிளையில் புதிதாக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் தலா 15,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 2022 இல் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ சித்திகளுடன் சித்தியடைந்த 74 பிள்ளைகளுக்கு தலா 20,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன், க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 ஏ சித்திகளுடன் சித்தியடைந்த 41 பிள்ளைகளுக்கு தலா 25,000 ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டது.
புலமைப்பரிசில் பெறுவோருக்கு இலங்கை வங்கியினால் உண்டியல், பயிற்சி புத்தகங்கள், தொப்பிகள் மற்றும் பாடசாலைப் பைகள் உட்பட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. புலமைப்பரிசில் விநியோகத்தைத் தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் இலங்கை வங்கி அதிகாரிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், யாழ் மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி, பணிப்பாளர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரவின் உறுப்பினர்கள், இலங்கை வங்கியின் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.