26th June 2024 21:56:35 Hours
பொசன் போயா தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்களின் முயற்சியில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 67 கர்ப்பிணித் துணைவியர்களுக்கு 21 ஜூன் 2024 அன்று அடிப்படை மகப்பேற்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.
இந்நிகழ்வின் போது, அண்மையில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த இராணுவ வீரரின் மனைவியின் குடும்ப தேவையை கருத்திற்கொண்டு ஆறு மாதங்களுக்குத் தேவையான பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.