25th June 2024 23:28:15 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கஜசிங்கபுரம், செட்டிகுளம் அரச மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எரந்த ஜயவர்ண மற்றும் அவரது துணைவியார் திருமதி சமதரா ஆகியோர் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.
வைத்தியர் டபிள்யூ.எஸ்.ஏ பெர்னாண்டோ மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நிகழ்ச்சிக்கு உதவினர். அப்பிரதேசத்திலுள்ள 60 இராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். மேலும், மருத்துவமனையின் பராமரிப்புக்கு அத்தியாவசிய தேவையுடைய, சுற்றாடலுக்கு உகந்த 100 லிட்டர் கிருமிநாசினிகள் மற்றும் சவர்க்காரங்களை தலைவி வழங்கினார்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், நிலைய தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சமூக சேவை முயற்சியில் பங்கேற்றனர்.