25th June 2024 22:51:33 Hours
பொசன் போயா தினத்தை முன்னிட்டு, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் கருத்திற்கமைய 2024 ஜூன் 23 அன்று ஸ்ரீ போதி ரஜராம விகாரையின் வண. பலாங்கொட ராதா தேரரினால் பனாகொடை இராணுவ வளாகத்தில் தர்ம பிரசங்கம் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.