22nd May 2024 17:40:16 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரின் வருடாந்த பொதுக் கூட்டம் 18 மே 2024 அன்று படையணி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தின் போது அழகு கலாசார நிகழ்வும் நடத்தப்பட்டது, இதன் போது அழகின் ரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் மகிழ்விக்கப்பட்டனர். போ எவர் ஸ்கின் நெசுரல்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான சாந்தனி பண்டாரவினால் அழகுக் கலாசார செயல்விளக்கம் மற்றும் விரிவுரை நடாத்தப்பட்டது.
இராணுவ வரலாறு மற்றும் இராணுவ இலக்கியம் தொடர்பாக ‘இராணுவ வீரரின் மாறுபட்ட வாழ்க்கை என்ற தலைப்பில் விரிவுரையினை “ரணவிருவா” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க பங்கேற்பாளர்களுக்கு நடத்தினார்.