25th June 2024 19:37:26 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவு பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (21 ஜூன் 2024) 4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் சேவையாற்றும் சிப்பாய்களின் தேவையுடைய 20 ஆரம்பப் பாடசாலை பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிலையான நன்கொடை வழங்கலை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி திட்டம் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க குறித்த பயனாளிகளுடன் உரையாடினார். பின்னர் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி படையலகு தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பின்னர் சட்னி தொழிற்சாலை விஜயம் மற்றும் தயாரிப்பு பற்றி கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், நிலைய தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.