25th June 2024 19:30:05 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஜி.எம் பிரேமதிலக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 16 ஜூன் 2024 அன்று மதவச்சி 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியில் புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்கள் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன் தனது உரையில், வாசிப்பின் மூலம் அறிவை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிகழ்வின் சிறப்பம்சமாக புதிதாக திறந்துவைக்கப்பட்ட நூலகத்தை வளப்படுத்த மதிப்புள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.