25th June 2024 19:21:34 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 2024 ஜூன் 23 அன்று கொழும்பு 05 இல் உள்ள இராணுவ தளபதியின் இல்லத்திற்கு அருகில் சீனிசம்பல் மற்றும் ரொட்டி தானம் வழங்கப்பட்டது.
இத்திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரால் மாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இராணுவத் தளபதியும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இணைந்து சமூக சேவையின் அடையாளமாக, தான நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு சீனிசம்பல் மற்றும் ரொட்டிகளை வழங்கினர்.
தாராள மனப்பான்மையுடன், சமூக ஒற்றுமை மற்றும் ஆதரவின் உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.