25th June 2024 08:28:29 Hours
இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் திருமதி ஹிமாலி நியங்கொட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2 வது இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி பீடீஎஸ்என் குணரத்ன அவர்களின் மேற்பார்வையில் படையினர் 19 ஜூன் 2024 அன்று ஹோமாகம தொலஹேன ஆரம்பப் பாடசாலையின் 99 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த உதவித்திட்டத்தில் பாடசாலை பைகள், தண்ணீர் போத்தல்கள், எழுதுபொருட்கள், காலணிகள், காலுறைகள் போன்றவை வழங்கப்பட்டன. மேலும் பிள்ளைகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மகிழ்விக்கப்பட்டதுடன், தேநீர் விருந்துபசாரம் மற்றும் மதிய உணவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில், இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிள்ளைகள் மற்றும் பணியாளர்களிக்கு ஆற்றிய உரையில் இந்த முயற்சியை முழுமையாகப் பயன்படுத்தி, இலவசக் கல்வியின் நன்மைகளை அதிகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.