23rd June 2024 16:49:07 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்கப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சீஎஸ் திப்படுகே அவர்களின் மேற்பார்வையில் அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் பொசன் தினத்தன்று மாலையில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அப்பகுதியிலுள்ள சுமார் 4500 பிரதேசவாசிகள் இத்திட்டத்தில் பயனடைந்தனர்.