21st June 2024 13:38:12 Hours
விஷேட படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு 15 ஜூன் 2024 அன்று கண்டி சிங்கிதி செவன சிறுவர் இல்லத்தின் 30 பிள்ளைகளுக்கான பாடசாலை எழுதுபொட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கண்டி பிரதேசத்தில் ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்றதுடன், அவர்களை மகிழ்விக்க விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களினால் மாலையில் சிற்றுண்டி மற்றும் தேநீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின்உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.