18th June 2024 18:29:23 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் வாக ஸ்ரீ ரத்தினசார பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2024 ஜூன் 14 அன்று நடத்தப்பட்டது.
சீரற்ற காலநிலையால் சமீபத்தில் வெள்ளத்தால் பாடசாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு சிறார்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.