18th June 2024 18:24:16 Hours
உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு 16 ஜூன் 2024 அன்று மதிய உணவை வழங்கியதுடன் அவ்விடத்தில் தந்தையர் தின நிகழ்வையும் கொண்டாடினர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். முதியோர்களின் மன நலனை மேம்படுத்தும் வகையில் இராணுவ கலிப்சோ இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி முதியோர்களுக்கு மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.