10th June 2024 17:58:29 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் 27 வது வருடாந்த பொதுக்கூட்டம் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷார யடிவவல அலுவிஹார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 02 ஜூன் 2024 அன்று விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் நோக்கங்களை திறம்பட அடைய அனைத்து உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் நேர்மறையான அணுகுமுறைகளை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தலைவி உரையாற்றினார்.
இந்நிகழ்வில், விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு 29 பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. விஜயபாகு காலாட் படை வீரரின் மகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூபா. 50,000.00 வழங்கப்பட்டது. அதே சமயத்தில் விஜயபாகு காலாட் படையணியின் சிவில் ஊழியர் ஒருவரின் மகனின் பல்கலைக்கழக கல்விக்கு ஆதரவாக ரூபா. 50,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது.
நடன பயிற்றுவிப்பாளர் திரு.சஹன் தீப்தா மேற்கத்திய நடனம் பற்றிய விரிவுரையை நடத்தினார். பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் நிதியை வலுப்படுத்தும் வகையில் தலைவியிடம் ரூ.500,000.00. கையளித்தார்.
நிகழ்ச்சி முடிவின் போது பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் மருத்துவ குணமிக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.