10th June 2024 17:53:25 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் 08 ஜூன் 2024 அன்று ஹெரலியாவல இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னர், திருமதி ஜானகி லியனகே அவர்களினால் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி குடும்பங்களில் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.