Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th June 2024 13:55:06 Hours

இராணுவ சேவை வனிதையரால் மிஹிந்து செத் மெதுர போர் வீரர்களுக்கு உதவி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்திற்கமைய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், அத்திடிய மிஹிந்து செத் மெதுரவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி 07 ஜூன் 2024 அன்று நடைபெற்றது. அபிமன்சல I,II,III மற்றும் மிஹிந்து செத் மெதுர ஆகியவற்றில் மீட்பு மற்றும் புனர்வாழ்வு பெற்று வரும் 125 போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பொருளாதார சுமைகளை குறைக்கும் வகையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிஹிந்து செத் மெதுரவிற்கு வருகை தந்த போது அங்கு வசிக்கும் போர்வீரர் ஒருவர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களை தாம்பூலம் வழங்கி மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மிஹிந்து செத் மெதுரவில் வசிக்கும் போர்வீரர்களுடன் ஒவ்வொரு வார்டுகளுக்கும் விஜயம் செய்து அவர்களின் மருத்துவ சிகிச்சைகள் குறித்த செயல்முறைகளைக் கேட்டறிந்து போர் வீரர்களின் மனநலத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை தளபதி மற்றும் பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அபிமன்சல I, II, III இன் 25 போர்வீரர்கள், 25 உதவியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கினார். அதன் பின், அவர் போர் வீரர்களுக்கான உணவு தயாரிப்பில் கலந்து கொண்டார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி நீச்சல் தடாகத்திற்குத் தேவையான சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் தேவையுடைய ஏனைய உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார், இது பொதுவாக அங்கு வசிக்கும் போர் வீரர்களின் நீர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

பின்னர், திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு மிஹிந்து செத் மெதுரவின் தளபதியும் அங்கு வசிக்கும் போர் வீரரும் இணைந்து சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கினர். மேலும், அந்நாளின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், தலைவி புறப்படுவதற்கு முன்னர் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் குழு படம் எடுக்க அழைக்கப்பட்டார்.

போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ, மிஹிந்து செத் மெதுரவின் தளபதி பிரிகேடியர் டிஎஸ் பாலசூரிய, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மகாவிதான கேஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.