07th June 2024 16:55:00 Hours
இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 75 வது இராணுவ தினத்தை முன்னிட்டு மோதர புனித ஜோன்ஸ் கல்லூரிக்கு இரண்டு மாதங்களுக்கு போதுமான உலர் உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக ரூபா.100,000.00. நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடை மூலம் பாடசாலையின் 134 மாணவர்கள், 13 ஆசிரியர்கள் மற்றும் 03 கல்விசாரா ஊழியர்கள் பயனடைந்தனர்.
மேலும், மாணவர்களுக்கு எழுது பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு அறுசுவை உணவும், தொடர் வேடிக்கை நிகழ்வுகளை நாடத்தி மகிழ்வித்தனர். இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) ஹிமாலி நியங்கொட அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.