05th June 2024 17:57:03 Hours
பிரதேச ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நோக்கில், 2024 ஜூன் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் தொடர்ச்சியான சமய நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
முதல் நிகழ்வான போதி பூஜை சோமாவதி ராஜா மகா விகாரையில் நடைபெற்றதுடன் அதே இடத்தில் வில்வம்பூ பான தானமும் இடம்பெற்றது. மேலும் 2024 ஜூன் 02 ஆம் திகதி 10 பௌத்த பிக்குகளுக்கு தானமும் வழங்கப்பட்டது. 3 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்காக தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்களின் மேற்பார்வையில் நிகழ்வுகள் நடைபெற்றன.