05th June 2024 18:02:02 Hours
7 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி சிறு-தொழில்களை மையமாகக் கொண்ட சுயதொழில் குறிப்பாக விளக்கு திரிகளை உற்பத்தி செய்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை .2024 ஜூன் 01ம் திகதி அனுராதபுரம் 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், திருமதி இஷினி நவரத்ன அவர்களினால் விழிப்புணர்வு நடாத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் தங்களுடைய சுயதொழிலைத் ஆரம்பிப்பதற்கு உதவும் மூலப்பொருள் அடங்கிய பொதிகளை இச்சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொண்டனர்.
இத்திட்டத்துடன் இணைந்து, சிவில் ஊழியர்கள் மற்றும் 7 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியில் பணியாற்றும் சிப்பாய்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டன. இம்முயற்சியின் மூலம் 21 சிவில் ஊழியர்கள் மற்றும் 16 சிப்பாய்களின் குடும்பங்கள் பயனடைந்தனர்.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 7 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கேஎம்எஸ்என் பிரேமரத்ன யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.