Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th June 2024 17:49:14 Hours

பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி உதிதா பெரேரா பொறுப்பேற்பு

திருமதி உதிதா பெரேரா அவர்கள் 30 மே 2024 அன்று, பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த திருமதி உதிதா பெரேரா அவர்களை பிரதான நுழைவாயிலில் பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி அருணி சந்திரசேகர அவர்கள் வரவேற்றார். அதன் பின்னர், திருமதி பெரேரா அவர்கள் பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, திருமதி உதிதா பெரேரா அவர்கள் தலைவியாக நிறுவனத்திற்கான தனது தொலைநோக்கு மற்றும் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் உரையாற்றினார்.

அன்றைய நிகழ்வுகள் அதிகாரிகள் உணவகத்தில் வழங்கப்பட்ட தேனீர் விருந்துபசாரத்துடன் முடிவடைந்தது, உறுப்பினர்கள் புதிய தலைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.