04th June 2024 17:41:01 Hours
பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுரங்கி அமரபால அவர்கள் 20 மே 2024 அன்று தனது கடமைகளை ஒப்படைத்தார். அவரது பதவிக் காலத்தை கௌரவிக்கும் வகையில், பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு 30 மே 2024 அன்று பொறியியல் சேவை படையணி அதிகாரிகள் உணவகத்தில் பிரியாவிடை விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
பிரியாவிடை நிகழ்வின் போது, திருமதி அமரபால அவர்கள் நிகழ்வை ஏற்பாடு செய்த பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உரையாற்றினார். அனைத்து சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களிடமிருந்தும் தனக்குக் கிடைத்த ஒத்துழைப்பு மற்றும் ஊக்கத்தைப் பற்றி அவர் கூறியதுடன், அவர்களின் ஆதரவை மிகவும் பாராட்டினார். தேநீர் விருந்துபசார நிகழ்வுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.