04th June 2024 17:36:46 Hours
திருமதி ஜானகி லியனகே அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக இரண்டு வருட சேவையை 03 ஜூன் 2024 அன்று நிறைவு செய்துள்ளார். இந்த மைல்கல்லை கௌரவிக்கும் வகையில் இராணுவ தலைமையக இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் தொடர் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
வண. வத்துரவில சிறி சுஜத தேரர் உட்பட மகா சங்கத்தினரால் நடாத்தப்பட்ட செத்பிரித் பாராயணங்களுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அலுவலகத்தில் பணிபுரியும் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதார சுமைகளை குறைக்கும் வகையில் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்.
இந்த திட்டத்துடன், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டில்களை நன்கொடையாக வழங்கினார்.