02nd June 2024 19:14:02 Hours
1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியானது பல சமூகத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பானலுவ பிரதேசத்தில் தகுதியான குடும்பம் ஒன்றின் பாழடைந்த வீட்டை திருத்தியமைக்கும் நடவடிக்கை குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி பிரதேசத்தின் கிராம சேவையாளரின் பரிந்துரைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் நிறைவு பெற்றது.
1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி படையினர் 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி கட்டளை அதிகாரி மேஜர் பி வன்னியாரச்சியின் வழிகாட்டுதலின் கீழ், திட்டத்திற்கு அத்தியாவசிய மனிதவளத்தை வழங்கினர். இத்திட்டதிற்கு உள்ளூர் அனுசரனையாளர்கள் தேவையான நிதி உதவியை வழங்கினர்.
இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி நியங்கொடவுடன் இணைந்து பூர்த்தி செய்யப்பட்ட வீட்டை 30 மே 2024 அன்று பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்ச்சியில் இராணுவ நலன்புரிபணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை இராணுவ பொது சேவை படையணி நிலைய தளபதி, 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி, 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி, 3 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி, 4 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.