31st May 2024 12:22:19 Hours
கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 26 மே 2024 அன்று வெசாக் பண்டிகையை முன்னிட்டு கனேமுல்ல கொமண்டோ படையணி தலைமையகத்தில் ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கெமாண்டே படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொமண்டோ படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கேகே தர்மவர்தன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.