30th May 2024 13:34:55 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்கே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தானம் மற்றும் சமூக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, 1 வது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி 23 மே 2024 அன்று வில்வபூ பானம் தானமாக வழங்கியதுடன், 4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி 21 மே 2024 அன்று செட்டிகுளம் அரசு மருத்துவமனையில் சிரமதான பணியை முன்னெடுத்ததுடன் 2024 மே 23 அன்று மரவள்ளிக்கிழங்கு தானமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.