30th May 2024 13:35:18 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பலபிட்டிய அனுலவிஜேராம சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறார்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. 25 மே 2024 ம் திகதி சிறார்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது, மேலும் சிறார்களுக்கான திரைப்படம் காட்சிபடுத்தப்பட்டதுடன் மேலும் பாடல்களுடன் வேடிக்கையான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு செல்வி எஸ் பெரேரா, திருமதி எஸ் கொலொன்னே, திருமதி ஷிராணி, திருமதி தன்யா வர்ணபுர மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அனுசரணை வழங்கினர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், 2024 மே 16 மற்றும் 17 ம் திகதிகளில் கட்டிடங்கள் புனரமைத்தல், குளியலறைகளை சரிசெய்தல், மின் அமைப்புகளை சரிசெய்தல் மற்றும் கூரை மின்விசிறிகளை மாற்றுதல், சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றம் சூழல் சுத்தம் செய்தல், கட்டிடங்களுக்கு பல வர்ணபூசல், போன்ற சிரமதான பணிகளை முன்னெடுத்ததுடன் சிறார்களுக்கு வெசாக் அலங்காரங்களை வழங்க வெசாக் கூடு அலங்காரம் போன்றன அமைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு, அதன் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினர்.