22nd May 2024 17:37:36 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 மே 16 அன்று செலூட் மண்டபத்தில் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஜயபாகு காலாட் படையணி படையினர் இப் பிரதேசத்திற்கு தேவைகாக இரத்த தானம் செய்தனர். விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.