Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd May 2024 18:54:25 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் வெசாக் தினத்துடன் இணைந்து தர்ம செற்பொழிவில் பங்குபற்றல்

‘வெசாக் போயா’ தினத்தை ஒட்டி, இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 21 மே 2024 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் ஒரு சிறப்பு தர்ம பிரசங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாரத பௌத்த விகாரையின் அதிபதி வண. தலல்லே சந்தகித்தி தேரர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட தர்ம பிரசங்கத்தில், அன்றாட வாழ்வில் உளவியல் மற்றும் உயிரியல் உறவுகளைப் பேணுவது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் இந்த சிறப்புமிக்க வெசாக் நிகழ்வில் கலந்து கொண்டார்.