23rd May 2024 18:39:51 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் தலைமையில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு அடிப்படை மகப்பேறு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் 2024 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வழங்கப்பட்டன.
கர்ப்பிணிப் இராணுவ பெண் படையினருக்கு ஆதரவை வழங்கும் இந் நிகழ்வை 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளான மேஜர் எஸ்ஜீஎம் பிரேமதிலக மற்றும் மேஜர் எச்எச்எச் டி சில்வா ஆகியோரால் இந் நிகழ்வு மேற்பார்வை செய்யப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.