23rd May 2024 19:01:31 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் தலைமையில், 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் உள்ள கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு 14 மே 2024 அன்று அடிப்படை மகப்பேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கர்ப்பிணிப் பெண் இராணுவ படையினருக்கு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட , 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எம்பீ சின்ஹாரகே இந்த நிகழ்வை மேற்பார்வையிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.