23rd May 2024 19:07:36 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரினால் 19 மே 2024 அன்று கரந்தெனியவில் உள்ள படையணி தலைமையகத்தில் செயற்கை உறுப்புகள் நன்கொடையை ஏற்பாடு செய்யப்பட்டது. இத் திட்டம் தேசிய போர்வீரர் தினத்தின் 15 வது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கரந்தெனிய மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும், நாட்டுக்காக சேவையில் ஈடுபட்டு தமது அவயவங்களை இழந்த இராணுவத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 27 செயற்கை உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு திரு. சுபெம், திருமதி. ஈ. டி சில்வா, கலாநிதி சஞ்சீவ் ராஜபக்ஷ மற்றும் திருமதி டிலு ரொட்ரிகோ, நீடி சமூக நலன்புரி அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கேபிட்டல் சிட்டி ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்களும் அனுசரணை வழங்கினர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.