27th May 2024 17:32:55 Hours
2024 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி முல்லேரியா தேசிய மனநல நிறுவனத்திற்கு இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் விஜயம் செய்தனர்.
இவ் விஜயம் ஆனது இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக வழங்கல் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடீஓ அவர்களின் மேற்பார்வையில்மேற்கொள்ளப்பட்டது. .
விஜயத்தில் இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் நோயாளிகளின் நலன் மற்றும் தேவைகளைப் பற்றி விசாரித்தனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
நோயாளிகளின் வாழ்க்கை சூழலை மேம்படுத்தும் பொருட்டு ஒரு வார்ட்டு கூரையை பழுது பார்த்ததுடன் நோயாளர்களுக்கு சுவையான மதிய உணவையும் வழங்கினர்.