26th May 2024 18:18:30 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் 24 மே 2024 தியவன்னா வெசாக் வலயத்தில் உணவு மற்றும் ஐஸ்கீரீம் தானம் வழங்கப்பட்டது.
இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி இணைந்து பங்கேற்பாளர்களுக்கு உணவு பொதிகளை வழங்கி மதிய உணவு தானத்தினை ஆரம்பித்து வைத்தனர். மாலையில் உணவு பொதிகள் மற்றும் ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு உணவு பொதிகள் மற்றும் ஐஸ்கிரீம் வழங்களை இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துணைவியர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.