22nd May 2024 12:43:37 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் 20 மே 2024 அன்று இராணுவ தலைமையக வளாகத்தில் படையணி தலைமையக சேவை வனிதையர் பிரிவு தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீதத்துடன் ஆரம்பமான கூட்டத்தில், உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சேவைகள் அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே உரையாற்றுகையில் எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிறைவேற்று செயலாளர் கெப்டன் எம்ஏடப்ளியு நிமாசா கடந்த கூட்ட அறிக்கையினை சமர்பித்ததுடன் பொருளாலர் கணக்காய்வ அறிக்கையினை சமர்பித்தார்.
அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இராணுவ புலனாய்வுப் படையணியில் (MIC) சேவையாற்றும் நான்கு இராணுவ வீரர்களுக்கு வீடு கட்டுமானத்திற்காக தலா 600,000/- நிதியுதவியை வழங்கினார். மேலும், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பூர்த்தி செய்வதற்கு ஆறு படையினருக்கு 450,000/- நிதி உதவியும் வழங்கப்பட்டது.
8 வது புலனாய்வு படையணியின் வீரர் ஒருவரின் மகனது இதய நோய் சிகிச்சைக்காகவும் 6வது (தொ) புலனாய்வு படையணி வீரரின் காயமடைந்த மகளின் சிகிச்சைக்காகவும் தலா 75,000.00/= பெறுமதியான இரண்டு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.
மேலும், மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு இணங்க புலனாய்வு படையணியின் மூன்று வீரர்களுக்கு தலா 100,000.00/= நிதி நன்கொடைகள் வழங்கப்பட்டன.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் வகையில் புலனாய்வு படையணியின் 20 வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், 10 இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மாதாந்த கூட்டத்தின் நிறைவில் தலைவி மற்றும் உறுப்பினர்களிடையே சிநேகத்தை வலுவூட்டும் வகையில் தேனீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது.