16th May 2024 15:25:42 Hours
இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான நலன்புரி திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன அவர்களினால் 13 மே 2024 அன்று தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கப்பட்டது.
அதன்படி, சிவில் ஊழியர் எஸ்.ஜி சுனில் குணரத்ன அவர்களின் கனவை நனவாக்கும் புதிய வீடு இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கைப் பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ ஆகியோரினால் வழங்கப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் தேவையான நிதி உதவி வழங்கப்பட்டதுடன், 1 வது கள இலங்கைப் பொறியியல் படையணியின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தினால் வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
இலங்கை இராணுவத்தில் மறைந்த, மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருக்கும் போர்வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நிரந்தர தங்குமிடங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பயனாளியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணியின் நிலைய தளபதி கேணல் எப் ஜோசப் யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், பெண் அதிகாரிகள், இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் வீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.