Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th May 2024 18:06:11 Hours

உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்க 306 சீ 1 சர்வதேச லயன்ஸ் கழகம் இராணுவத்துடன் கைகோர்ப்பு

சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ 1 இன் மாவட்ட ஆளுநர் அவர்களின் தலைமையில், பொருளாதார மற்றும் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த உரு தொகை பலா மற்றும் இலுப்பை கன்றுகளை இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் நேற்று (15 மே 2024) இடம்பெற்ற நிகழ்வின் போது இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டீயூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 மாவட்ட ஆளுநரான லயன் பந்தக தாபரே, லயன்ஸ் பெண்கள் கழக உறுப்பினரான லயனஸ் தில்ருக்ஷி தபாரே மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 மாவட்ட திட்ட முகாமையாளர் மேஜர் துஷார சமரதுங்க (ஓய்வு), இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 மாவட்ட உறுப்பினர்கள் 2500 பலா மற்றும் இலுப்பை கன்றுகளை இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரிடம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வழங்கினர்.

மேலும் சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 பெண்கள் கழகத்தின் தில்ருக்ஷி தாபரே அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தற்போதைய நலத்திட்டங்களை மேம்படுத்த ரூ 0.1 மில்லியனை நன்கொடையாக வழங்கினார். சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 மாவட்ட திட்ட முகாமையாளர் மேஜர் துஷார சமரதுங்க (ஓய்வு) அவர்கள் அதே சந்தர்ப்பத்தில் போர் வீரர்களின் நலனுக்காக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இரு சக்கர நாற்காலியை நன்கொடையாக வழங்கினார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 மாவட்ட கழகத்தின் பெறுமதியான பங்களிப்புகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அவர்களின் தாராளமான உதவியைப் பாராட்டி அதன் உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கினார்.

சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ1 இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரின் முன்மாதிரியான சேவையை பாராட்டி அவர்களுக்கு பாராட்டுச் சின்னங்களை வழங்கி பாராட்டினர்.

14 மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பலா மற்றும் இலுப்பை கன்றுகள் வழங்கப்பட்டன. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.