09th May 2024 20:24:40 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனதையர் பிரிவு அதன் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் கருத்திற்கமைய 02 மே 2024 அன்று பொரளை படையணி தலைமையகத்தில், படையணி தலைமையகம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் கடமையாற்றும் கர்ப்பிணி சிப்பாய்களுக்கு குழந்தைப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களை இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்கள் அன்புடன் வரவேற்றார். இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் பணிபுரியும் 16 கர்ப்பிணிப் சிப்பாய்கள் தலா ரூ. 8000.00 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.