09th May 2024 20:17:08 Hours
நலன்புரிச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவு இலங்கை இராணுவ சேவைப் படையணியில் சேவையாற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் கர்ப்பிணித் துணைவியர்களுக்கான குழந்தைப் பொருட்களை 04 மே 2024 அன்று கட்டுநாயக்க 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியில் விநியோகித்தது.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ, 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் யூ.டி.கே பெரேரா மற்றும் திருமதி அனுஷா விக்கிரமசிங்க ஆகியோரின் கருத்திற்கமைய இந்த நன்கொடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
45 கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த திட்டத்தில் பயனடைந்ததுடன், இலங்கை இராணுவ சேவைப் படையணி உறுப்பினர்கள் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கினர்.
நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டமாக, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தர் திருமதி கே.டி.ஐ பெரேரா அவர்கள் 'தாய்மார்களுக்கான பிரசவத்திற்கு முன்னைய மற்றும் பிரசவத்திற்கு பிந்திய நிலைமைகள்' என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களை தெளிவூட்டும் விரிவுரையை ஆற்றியதுடன், இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினரான வைத்தியர் மனோரி மாரசிங்க அவர்கள் 'தாய்ப்பால் ஊட்டுதல்' பற்றி விளக்கமளித்தார்.
அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.