09th May 2024 18:34:10 Hours
2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினால் 06 மே 2024 அன்று கரந்தெனிய படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் மூக்குகண்ணாடி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு 200 மூக்ககண்ணாடிகளை வழங்கினார். கரந்தெனிய பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.டி.டி ரசிக குமார பீஎஸ்சீ மற்றும் அவரது துணைவியார் இணைந்து இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினர்.
திருமதி. எல் பெரேரா மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியில் சேவையாற்றும் உறுப்பினர்கள் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கியதுடன், வைத்தியர் அனுர குணதிலக்க அவர்கள் கண் மருத்துவ உதவியை வழங்கினர். மேலும் திருமதி அனோமி குணசேகர மற்றும் திருமதி ஆர் தமயந்தி ஆகியோர் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.