09th May 2024 18:26:27 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்திற்கமைய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையுடன் யாழ். மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு (08 மே 2024) அன்று இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் அலுவலகத்தில் உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். யாழ். மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பொருளாதாரச் சுமைகளைத் குறைக்கும் வகையில் இந்த நன்கொடை நிகழ்வை இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த திட்டத்தில் மொத்தம் 200 சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பயனடைந்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.