06th May 2024 18:30:28 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவு மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் 350 பெண் நோயாளர்களுக்கு நன்மை பயக்கும் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சியின் கீழ் பெட்ஸீட்கள், தலையணை உறைகள், டவல்கள் மற்றும் பல அத்தியாவசிய மருத்துவமனைத் தேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த பொருட்கள் 27 ஏப்ரல் 2024 அன்று மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் நில்மினி பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.