06th May 2024 16:24:25 Hours
இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு 19 ஜனவரி 2024 அன்று இராணுவ பீரங்கி படையணியில் சேவையாற்றும் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் 200 பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுவென்திரினி ரொட்ரிகோ அவர்கள் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுடன் இணைந்து, இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி தனுஜா டயஸ், சிப்பாயின் ஒருவரின் விசேட தேவையுடைய பிள்ளைக்கு சக்கர நாற்காலியை வழங்கினார்.
இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.