04th May 2024 07:23:22 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு 02 மே 2024 அன்று கம்புருபிட்டிய அபிமன்சல II இல் மீட்பு மற்றும் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ள போர்வீரர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வை நடாத்தியது. பயனாளிகள் 'அபிமன்சல I, II, III, மற்றும் மிஹிந்து செத் மெதுர ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போர் வீரர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கினார்.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி நீச்சல் தடாகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்துவதற்காக திரவ குளோரினை நன்கொடையாக வழங்கினார். திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு சிகிச்சை பெரும் போர் வீரர் ஒருவருடன் இணைந்து அபிமன்சல II இன் தளபதியினால் விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அன்றைய தினத்தின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், தலைவி புறப்படுவதற்கு முன்னர் போர்வீரர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.