25th April 2024 18:08:30 Hours
கஜபா படையணி சேவை வனிதையரின் புத்தாண்டு சந்தை – 2024, கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திலுபா பீரிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஏப்ரல் 9 முதல் 11 வரையான திகதிகளில் சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் இறுதி நாளில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். கொமாண்டோ கே9 பிரிவின் நாய்களின் கண்காட்சி, இராணுவ பொலிஸ் படையணி குழுவின் மோட்டார் சைக்கிள் சாகச கண்காட்சி, இசைக்குழு இசை நிகழச்சி, ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் மற்றும் புகழ்பெற்ற பாடகர்கள் பங்கேற்கும் நேரடி இசை நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்வுகளுடன் கஜபா சேவை வனிதையரின் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .
பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கும், இராணுவத்தினரும், புத்தாண்டுக்கு முன்னதாக தமது வீட்டுத் தேவைகளை சலுகை விலையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் இச்சந்தையில் கிடைத்தது. மேலும், தினமும் மாலையில் நடனக் குழுவினரின் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சியும் மக்களை மகிழ்வித்த்து.