Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

24th April 2024 17:21:17 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் தியத்தலாவ மிஹிந்து மகா வித்தியாலய மாணவர்களுக்கு நன்கொடை

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் தியத்தலாவ, கதுருகமுவ, மிஹிந்து மகா வித்தியாலய மாணவர்களுக்கு 22 ஏப்ரல் 2024 அன்று நன்கொடை வழங்கப்பட்டது.

இத் திட்டம் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 111 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ , இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.