22nd April 2024 21:58:16 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மஹியங்கனை, கிராந்துருகோட்டே பிரதேசத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவரின் குடும்பத்திற்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது. இப் புதிய வீடு 11 ஏப்ரல் 2024 அன்று அதிகாரவாணையற்ற அதிகாரி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் 450,000/- மதிப்பிலான பண நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் பொறியியல் சேவை படையினர் மற்றும் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள உதவியை பயன்படுத்தி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்வின் போது, 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எச்எச்எச் டி சில்வா அவர்களினால் பயனாளிக்கு வீட்டு சாவி அடையாளமாக கையளிக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.