22nd April 2024 18:34:39 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் 16வது வருடாந்த பொதுக்கூட்டம் 2024 மார்ச் 29 ஆம் திகதி பனாகொடை பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில், பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் போரெவர் ஸ்கின் நேச்சுரல் நிறுவனத்தின் தலைசிறந்த அழகு கலை பயிற்சியாளரான திருமதி ருவந்திகா ஹுலங்கமுவ அவர்களலை சிறப்பு விரிவுரை நடாத்தப்பட்டது.
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி பிமலி பீரிஸ் அவர்கள் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.